சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசைவில், இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் விஜயா பரிகாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
விஜயா அம்மன் போல கெட்டப்பில் தீச்சட்டியை கொண்டு செல்கிறாள்,மனோஜ் தன் உடம்பில் வேப்பிலை கட்டிக்கொண்டு தீச்சட்டியை எடுக்கிறார்.
கோயிலில் தீச்செட்டி எடுத்தபோது, முத்து அவர்கள் வீடியோ எடுத்துவிட்டான். அந்த வீடியோவை வீட்டில் உள்ள அனைவருக்கும் காட்டிய போது, அண்ணாமலை, ரவி, ஸ்ருதி மூவரும் மனமோசமாக சிரிக்கிறார்கள்.

இப்படி கலகலப்பாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைந்துள்ளது.
நாளைய புரொமோ
இன்றைய கலகலப்பான எபிசோடு முடிவுக்கு வந்த பின்னர், நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது.
அதில், ரோஹினி தனது தாலி செயினை காட்டி, ரூ. 2 லட்சம் கொடுத்து விஜயாவிடமிருந்து பணம் பெற்றதாக கூறியது பர்வதியின் வாயிலாக மீனாவிற்கு தெரியவருகிறது. மீனா, ரோஹினி இதனைச் செய்திருப்பாரா என்பதை உறுதி செய்ய கேட்கிறாள்.
இந்த விஷயத்தை மீனா, முத்துவிடம் கூறுவாரா அல்லது அப்படியே விட்டுவிடுவாரா என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.