லோகேஷ் பென்ஸ் இயக்கத்தில் இணையும் முன்னணி நடிகர் – மாஸான அப்டேட் இதோ!

    0
    106
    லோகேஷ் பென்ஸ் இயக்கத்தில் இணையும் முன்னணி நடிகர் – மாஸான அப்டேட் இதோ!
    லோகேஷ் பென்ஸ் இயக்கத்தில் இணையும் முன்னணி நடிகர் – மாஸான அப்டேட் இதோ!

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த படமாக கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இயக்குனர் என்ற பயணத்தைதாண்டி, தற்போது தயாரிப்பாளராகவும் நடிக்கின்றார். அவரது தயாரிப்பில் அடுத்ததாக உருவாகும் பென்ஸ் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படம் எதிர்பார்ப்பை எழுப்பி வருகிறது. முன்பே இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது.

    லோகேஷ் பென்ஸ் இயக்கத்தில் இணையும் முன்னணி நடிகர் – மாஸான அப்டேட் இதோ!

    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் முன்னணியில் ஜொலித்து வரும் லோகேஷ், தனது எல்சியூ பிரம்மாண்டத்திற்குள் பென்ஸ் திரைப்படத்தை இணைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சூப்பர் அப்டேட்!

    இந்த நிலையில், பென்ஸ் படத்திற்கு முக்கியமான மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

    படம் முழுக்க ஆக்க்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ள நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

    Advertisement