
மமிதா பைஜூ
மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் தோன்றி, சூப்பர் சரண்யா படத்தின் மூலம் பிரபலமாகியவர் மமிதா பைஜூ.இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட மமிதா பைஜூ, இந்த ஆண்டு ப்ரேமலு என்ற ஹிட் படத்தை வழங்கியுள்ளார். மேலும், தளபதி விஜய்யுடன் இணைந்து தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜையில் பங்கேற்ற மமிதா பைஜூ, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

இளம் நடிகருடன் கூட்டணி
இந்நிலையில், மமிதா பைஜூ அடுத்ததாக ஒரு புதிய படத்தில் இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லவ் டுடே எனும் சென்சேஷனல் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ இந்த புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும், இத்திரைப்படத்திற்கு இளம் சென்சேஷனல் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
