தளபதி 69
தளபதி விஜய் அரசியலுக்கு முதன்மை கொடுத்துள்ள நிலையில், தனது கடைசி திரைப்படமாக தளபதி 69 என்பதை அறிவித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை கே.வி.என் நிறுவனம் பெருமையுடன் தயாரிக்கிறது.

தளபதி 69 திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முதல் லுக் போஸ்டர்:


விஜய்யின் கடைசி படம் தளபதி 60 இன் முதல் லுக் போஸ்டரை வருகிற டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு வெளியிடுவதற்கான திட்டத்தை படக்குழு எடுத்துள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது முக்கியமானது.