Tourist Family Movie Teaser
ரொம்ப நாளாகவே இதுபோல ஒரு கதையை பார்க்க காத்திருந்தோம் – ஆச்சரியப்படுத்திய சசிகுமார்!
சசிகுமாரின் சமீபத்திய திரைப்படம் நந்தன், ரசிகர்களின் மனதை உருகவைத்துக்கொண்டிருக்கிறது. இப்போது தமிழ்த் திரையுலகில் பேசப்படும் ஹாட் டாபிக்காக மாறியிருக்கும் இந்த படம், உணர்ச்சிப் பொங்கலை ஏற்படுத்தியதோடு, கண்களை கசக்க வைத்துவிடும் காட்சிகளால் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
அபிஷான் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள அவரது அடுத்த படத்தின் டைட்டில் டீசர், எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக வந்துள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி என பெயரிடப்பட்ட டீசர் தற்போது வைரல் ஆகி வருகிறது. தொடக்க காட்சியிலேயே சசிகுமார் தனது குடும்பத்துடன் ஊரை விட்டு செல்ல திட்டமிடுகிறார்.
இலங்கை தமிழ் மொழியில் அவர்கள் பேசும் பாணி கவனம் ஈர்க்கிறது, அதில் சிம்ரனும், இரு மகன்களும் சசிகுமாரின் டென்ஷனை புரிந்து கொள்ளாமல் வேடிக்கையாக நடந்து கொள்வது சுவாரஸ்யமாக வருகிறது.
சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி
டீசர் எளிதாக அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. எல்லா சிக்கல்களையும் சமாளித்து, குடும்பத்துடன் ஊரை விட்டு ஓட முயலும் சசிகுமாரின் முயற்சிகள் நகைச்சுவையுடன் நிறைந்திருக்கின்றன.
இயல்பான பேச்சு முறை மற்றும் குறும்பு நிறைந்த வசனங்கள், குறிப்பாக, “ஓடும்போது எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா?” என சசிகுமார் கேட்க, உடனே சிம்ரன், “இன்னொரு கல்யாணம் மட்டும் பண்ண சொல்லாதீங்க” என சொல்லும் காட்சி பெரும் சிரிப்பை ஏற்படுத்துகிறது.
அதேபோல, “போலீசிடம் சிக்கினா என்ன செய்வீர்கள்?” என மகனிடம் கேட்கும் சசிகுமாருக்கு, “அப்பா தான் பிளான் போட்டது என சொல்வோம்” என்கின்ற மகனின் பதில், உண்மையான குடும்ப காமெடியாக மெலிதாக இடம் பிடித்துள்ளது.
இந்தக் காமெடி கலந்த குடும்ப கதையுடன், சசிகுமார் ஒரு பெரிய பிளான் போட முயலும் காட்சிகள் கதையை மிகவும் ஆவலாகக் காத்திருக்க வைத்திருக்கின்றன. எதிர்பார்ப்பை உயர்த்திய “டூரிஸ்ட் ஃபேமிலி” டீசருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்துக் கொண்டிருக்கின்றனர்.