நாக சைத்தன்யா-சோபிதா
திரையுலகின் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் முன்னணி நடிகருமான நாக சைத்தன்யா, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதலித்து வருகிறார்.
இவர்கள் இருவரின் காதலுக்கு குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்ததுடன், அண்மையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி சிறப்பாக திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நாக சைத்தன்யா மற்றும் சோபிதாவின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
நெட்பிளிக்ஸ் கொடுத்த பணம் எவ்வளவு?
இந்த நிலையில், நாக சைத்தன்யா மற்றும் சோபிதா திருமணத்தை சுற்றிய புதிய தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள இவர்களின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அது ரூ.50 கோடி மதிப்பில் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த தகவல் உண்மையா எனத் தெளிவாகத் தெரியவில்லை.

“நயன்தாராவின் திருமணம் ஆவணப்படமாக வெளிவந்ததற்கு பிறகு, நாகர்ஜுனா இந்த முடிவை எடுத்திருக்கிறாரா?” எனும் கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.